மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா… என்று பாடினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. ஆனால் நிஜத்திலோ.. ஏன் பிறந்தாய் மகளே ஏன் பிறந்தாயோனு பெத்தவங்களும்.. நான் ஏன் பிறந்தேன்னு பாடுற பெண்களும் நிறையவே இருக்காங்க..

24 மணி நேரமுமம் சுத்துற பூமாதேவிய போல.. மனோ வேகத்ல சுத்துற பெண்கள் தாங்க அதிகம்.. அதிகாலை 4 மணிக்கு சுத்த ஆரமிக்கிர இவங்க உலகம்.. வீட்ல மாமனார் மாமியார கவனிச்சு கணவனை அலுவலகத்திற்க்கும் குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பிவிட்டு அரக்க பரக்க ரெடி ஆகி ஆட்டோ புடிச்சு பஸ் புடிச்சு சரியான நேரத்துக்குள்ள ஆபீஸ் சீட்ல வந்து உக்காந்ததும் வரும் பாருங்க ஒரு நிம்மதி பெருமூச்சு.. அப்பப்பபா.. இன்றைக்கு அநேக பெண்களோட நாட்கள் இப்படி தான் போகுது.. ஆபீஸ்ல மீட்டிங் நடந்திட்டு இருக்ககும்.. ஆனா நம்ம மைன்ட்ல.. குழந்த லஞ்ச் ஒழுங்கா சாப்டிச்சாங்கரதுல ஆரமிச்சு.. நைட் டின்னர் என்ன செய்யலாம்க்ரது வரைக்கும் ஒரு Deep Discussion போகும்.. Physically Present Mentally Absentனு அந்த இடத்ல நாமளே அப்படிதான் இருப்போம் .

ஆபீஸ்ல கடிகார சின்ன முள்ள விட வேகமா சுத்தி.. ஒரு வழியா சாயுங்காலம் சோர்ந்து வீட்டுக்கு போனா .. கடவுளே.. வேலைக்காரம்மா அன்னைக்கு வந்திருக்க மாட்டாங்க.. கிச்சன் ஸிங்க் முழுவதும் பாத்திரம்.. சோ அப்பானு!!! மேலும் டயர்டாகும்.. அத விட பசங்க ஸ்கூல் டைரியை ஓபன் பண்ணும் போதே மனசுக்குள்ள மினி Prayera ஓடும்.. கடவுளே.. இன்னைக்கு எந்த ப்ராஜெக்ட் வொர்க்கும் இருக்க கூடாதுனு.. அது என்னமோ தெரியல.. இந்த பள்ளி ஆசிரியர்களெல்லாம் ப்ராஜெக்ட் யாருக்கு குடுக்குறாங்கன்னே தெரியல .. ஒரு வழியா Home Work பண்ண வச்சு, மறு நாள் கிளாஸ் டெஸ்ட்டுக்கு படிக்க வச்சு, ப்ராஜெக்ட் வொர்க் இருந்தா முடிச்சு.. மணிய பார்த்தா .. வீட்ல தெய்வ மகள் ஓடிட்டு இருக்கும்.. அதுக்கப்புறம் டின்னர் செஞ்சு எல்லாருக்கும் குடுத்துட்டு பசங்கள சாப்ட வைக்கிறதுக்குள்ள .. நமக்கு பசிங்கற உணர்வே மறந்து போயிருக்கும் .. அதுக்கப்புறம் சாப்பிட்டுட்டு மறுநாள் காலை சமையலுக்கு தேவையானதை எடுத்து வச்சிட்டு .. போய் தூங்கலாமேன்னு பார்த்தா .. ஒரு பக்கம் ஆபீஸ் டென்ஷன்ல முகத்த காட்ர கணவன்.. மறு பக்கம் பிரெஷா விளையாடிட்டுருக்கிற குழந்தை .. இதுவே ரெண்டு குழந்தைகள்னா .. ஒரு குருஷேத்திர போரே நடக்கும்.. அம்மா பக்கத்ல நான்தான் படுப்பேன்னு .. இதெல்லாம் ஒரு வழிய முடிஞ்சு.. நாம தூங்குரதுக்குள்ள.. ஆதவன் படத்ல வடிவேலு சொல்வாரெ… பொழுது விடுஞ்சிரும்ங்க.. அது தான் நடக்கும் .

நிறைய பேர் வீட்ல தினம் தினம் இப்டித்தாங்க நடக்குது. இப்படியான உங்க நேரத்தில உங்களுக்கு தேவையான விஷயங்களை ஒரே இடத்தில் தர முயற்சி பண்ணியிருக்கோம். Enjoy பண்ணுங்க.... உங்களோட அனுபவங்கள் டிப்ஸ்களை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க.. Feedbacks வரவேற்கப்படுகிறது.