புரட்டாசி சனி விரத முறை

புரட்டாசி சனி விரத முறை:

புரட்டாசி சனியன்று காலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். பகலில் மதியம் மட்டும் எளிய உணவு உண்ண வேண்டும். காலை, இரவில் பால், பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம். பகலில் விஷ்ணு சகஸ்ரநாமம், வெங்கடேச ஸ்தோத்திரம், அஷ்டோத்திரம் (108 போற்றி) படிக்க வேண்டும். பெருமாளுக்கு நைவேத்யமாக துளசி தீர்த்தம், இளநீர், தயிர்,பழங்கள் படைத்து வழிபட வேண்டும். இந்த விரதம் மேற்கொண்டால் கிரகதோஷம் நீங்கும். குறிப்பாக சனிக்கிரகத்தால் ஏற்படும் கெடுபலன் அகலும். வறுமை நீங்கி செல்வவளம் பெருகும். இரவில் பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு நெய் தீபமும், சனீஸ்வரருக்கு எள்தீபமும் ஏற்றி வழிபட வேண்டும்.

Divine Talking Clock