விநாயகர்

விநாயகர் - முதன்மையானவர்
நாயகன் என்றால் தலைவன் என்று பொருள். ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். விநாயகர் என்ற சொல்லுக்கு, இவருக்கு மேல் பெரிய தலைவர் (முதன்மையானவர்) எவருமில்லை என்பது முழுப் பொருளாகும். கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படும்போது ‘ஓம் அநீஸ்வராய நம’ என்றும் கூறுவார்கள். அநீஸ்வராய என்பதற்கு தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் (இறைவன்) இல்லை என்பது பொருளாகும்.
நவக்கிரக நாயகன்
ஓம்காரமான பிரணவத்தின் நாயகனாய் திகழும் விநாயகரின் உடலில் நவக்கிரகங்கள் அடங்கி இருக்கின்றன. விநாயகரின் நெற்றியில் சூரியன் உறைந்துள்ளார். அதே போல் நாபியில் சந்திரனும், வலது தொடையில் செவ்வாயும், வலது கீழ் கையில் புதனும், வலது மேல் கையில் சனியும், தலையில் குரு பகவானும், இடது கீழ் கையில் சுக்ரனும், இடது மேல் கையில் ராகுவும், இடது தொடையில் கேதுவும் இடம்பெற்றுள்ளனர். எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான பலன் கிடைக்கும்.
அரசமரத்தடி ஏன்?கணபதி பெரும்பாலும் ஆற்றங்கரை ஓரங்களிலும், குளக்கரை ஓரங்களிலும் உள்ள அரச மரத்தின் அடியில்தான் வீற்றிருப்பார். அங்கு தான் விநாயகரின் விக்கிரகங்களை ஸ்தாபனம் செய்வார்கள். நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. குளித்து முடித்தவுடன் இறைவனை தரிசனம் செய்வது மிகவும் சிறந்தது என்பதால் குளக்கரை ஓரம் இருக்கும் அரச மரத்தின் அடியில் விநாயகரை வைத்துள்ளனர்.
பெண்கள் அரச மரத்தை சுற்றி வரும் போது கிடைக்கும் காற்று, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்க கூடியது. எனவே கிராமங்களில் ஆற்றங்கரைகளிலோ, குளக்கரை ஓரங்களிலோ உள்ள அரசமரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.
விநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்?

மகப்பேறு பெற மருத இலை, எதிரிகளின் தொல்லை நீங்க அரச இலை, இதர துன்பங்கள் நீங்க அகத்தி இலை, சுகமான வாழ்வு பெற வில்வ இலை, சுகமான வாழ்வு பெற வெள்ளெருக்கு இலை, புகழ் பெற மாதுளை இலை, லட்சுமி கடாட்சம் பெற கண்டங்கத்திரி இலை ஆகியவற்றால் பூஜிக்க வேண்டும். அருகம்புல், செம்பருத்தி, வெள்ளெருக்கு, மாவிலை இவைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் இவை எல்லாவற்றையும் ஒன்றாக அடையலாம்.

Divine Talking Clock