பிள்ளையார் நோன்பு

பெருமைக்குரிய வாழ்க்கை அமைய பிள்ளையாருக்கு 21 நாட்கள் விரத வழிபாடு முறை:

நாம் எந்தவொரு காரியத்தையும் செய்யத் தொடங்கும் முன்பாகவும், முழுமுதற்கடவுளாம் விநாயகப் பெருமானை வழிபடுவது வழக்கம். திருக்கார்த்திகை நாளில் இருந்து 21 நாட்கள் தொடர்ந்து விரதமிருந்து பிள்ளையாரை வழிபட்டு வரவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு நூல் திரி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

21-வது நாளில் சஷ்டியும், சதயமும் கூடும் நேரத்தில் ஆவல்களை நிறைவேற்றும் ஆனைமுகன் சன்னிதியில் ஐந்து வகை பொரி (நெல் பொரி, கம்புபொரி, சோளப்பொரி, அவல்பொரி, எள்ளுப் பொரி) வைத்து, ஆவாரம் பூ அருகில் வைத்து, கருப்பட்டியில் பணியாரம் செய்து படைத்து கணபதியை வழிபட வேண்டும். 21 நாட்கள் எடுத்து வைத்த 21 திரியையும் ஒரே திரியாக்கி, வெல்லம் இணைத்த அரிசி மாவை நடுவில் வைத்து இழை எடுத்துக் கொள்வது வழக்கம்.

இந்த வழிபாட்டின் மூலமாக தனவிருத்தி, தான்ய விருத்தி, இனத்தார் பகை மாறுதல், எடுத்த செயலை எளிதில் முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். அது மட்டுமல்லாமல், இனவிருத்தி பெருகும் என்பதும் நம்பிக்கை.

Divine Talking Clock